×

உசிலம்பட்டியில் அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

உசிலம்பட்டி, ஆக. 2: விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், கரும்பு, நெல்லுக்கு உரிய விலை வழங்க வேண்டும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் நேற்று 28வது நாளாக நடந்த காத்திருப்பு போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையில் அக்னி சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உசிலம்பட்டி 58ம் கால்வாய் தொட்டி பாலத்தின் அருகே கல்குவாரிக்கு அனுமதி அளித்த அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post உசிலம்பட்டியில் அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Agni ,Chatti ,Uzilampatti ,Agni Chatti ,
× RELATED அக்னி நட்சத்திர காலம் துவங்கும்...