×

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ,20 லட்சம் அபேஸ் மருமகனுக்கு டிமிக்கி மாமனார் மீது வழக்கு: போலீசார் விசாரணை

 

நிலக்கோட்டை, ஆக. 2: சின்னாளப்பட்டியில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.20 லட்சத்தை மருமகனிடம் ஏமாற்றிய மாமனார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யாதுரை(65). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மருமகன் மதுரை கிருஷ்ணாபுரம் நடராஜர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவர் மனைவி லெட்சுமி (35)ந்துடன் வசித்து வரும் இவர் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனாரிடம் சுரேஷ்குமார் பேசியுள்ளார்.

அய்யாத்துரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் தான் இடம் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்படி சுரேஷ்குமார் பல தவணைகளாக ரூ.20 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அய்யாத்துரை நிலத்தை வாங்கித்தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது.கொடுத்த பணத்தை மீண்டும் திருப்பித் தராததால் இதுகுறித்து சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று சுரேஷ் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்ஐ கோமதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து தகவலறிந்து தலைமறைவான அய்யாத்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ,20 லட்சம் அபேஸ் மருமகனுக்கு டிமிக்கி மாமனார் மீது வழக்கு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Timmy ,Abbes ,Nilakottai ,Chinnalapatti ,Dinakaran ,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி