×

ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி விழா துவக்கம்

ஓசூர், ஆக.2: ஓசூர் மாருதி நகர் முத்துமாரியம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு, மங்களா மகா நவச்சண்டியாகம் நேற்று துவங்கியது. நாளை 3ம் தேதி கணபதி ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ேஹாமம் நடக்கிறது. பின்னர் கொடிமர பூஜை, காப்பு கட்டுதல் மற்றும் சக்தி பூஜை, மாலை அம்மன் ஊர்வலம் நடக்கிறது. 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விசேஷ பூஜைகள் மற்றும் சக்தி அழைப்பு, அம்மன் ஊர்வலம் நடக்கிறது. 10ம் தேதி ஓசூர் ராம்நகர் அங்கம்மாள் குடும்பத்தார் வீட்டிலிருந்து, தாய் வீட்டு சீதனமும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். 11ம் தேதி கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலிலுக்கு சக்தி கரகம், பால்குடம், அலகு குத்துதல், விமான அலகு குத்துதல், அக்னி கரகம், திருவிளக்கு பூஜை,  வெங்கடாசலபதி நாடக சபா குழுவினரால் அர்ஜூனன் தபசு நாடகம் நடைபெறுகிறது.13ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மனை ஆற்றுக்கு அழைத்துச் செல்லுதல், காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்தா வெங்கடேஷ், தலைவர் பாபு ரங்கண்ணா, பொது செயலாளர் ராஜி, பொருளாளர் ராமநாதன், உப தலைவர் செல்வம், துணை செயலாளர் வேலு, ஆலய கமிட்டியினர் மணி, மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

The post ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி விழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Aadi Festival ,Hosur Muthumariamman Temple ,Hosur ,annual ,Aadi Utsava festival ,Hosur Maruti Nagar Muthumariamman Temple ,Mangala Maha ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்