×

3 மாநில பட்ஜெட் தொகையை விட அதிகம்; 4,000 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள 4,001 எம்எல்ஏ.க்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி என்று ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள 4,033 எம்எல்ஏ.க்களில் 4,001 எம்எல்ஏ.க்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் 84 கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்களில், ஒரு எம்எல்ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடியாக உள்ளது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு ரூ.54,545 கோடியாகும். இது இது நாகாலாந்து, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் 2023-24ம் ஆண்டிற்கான கூட்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டில் நாகாலாந்துக்கு ரூ.23,086 கோடி, மிசோரத்துக்கு ரூ.14,210 கோடி, சிக்கிமிற்கு ரூ.11,807 கோடி என மொத்தம் ரூ.49,103 கோடி மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 1,356 பாஜ எம்எல்ஏ.க்களில் ஒரு எம்எல்ஏ.வின் சராசரி சொத்து ரூ.11.97 கோடியாகவும் 719 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் ஒரு எம்எல்ஏ.வின் சராசரி சொத்து ரூ.21.97 கோடியாகவும் உள்ளது. இதே போல், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ரூ.3.51 கோடி, ஆம் ஆத்மி ரூ.10.20 கோடி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.23.14 கோடியாக உள்ளது. பாஜ எம்எல்ஏ.க்களுக்கு மட்டும் ரூ.16,234 கோடி, காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு மட்டும் ரூ.15,798 கோடி சொத்து இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 3 மாநில பட்ஜெட் தொகையை விட அதிகம்; 4,000 எம்எல்ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி: ஆய்வறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Organizations for Democratic Reforms ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...