×

10ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 10ம்தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், ஒன்றிய நகர, பேரூர் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 10ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : 10th DMD ,Vijayakanth ,CHENNAI ,DMUDI ,Karnataka government ,Tamil Nadu ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா மரியாதை