×

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தால் சிறுமியை கடத்திய வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது

தண்டையார்பேட்டை: மாங்காடு ஜலானி நகரைச் சேர்ந்தவர் பரிமளா (37). இவர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். எனது 14 வயது மகளும், நானும் ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு எனது உறவினர் மஞ்சுளா 5 மாத கர்ப்பிணியாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்க்க வந்த போது திடீரென எனது மகள் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடித்து தரும்படி அந்த புகாரில் பரிமளா கூறியிருந்தார். அதன்பேரில் ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காணாமல் போன சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்ற தீனா (20) என்பவருடன் 20 நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனைக்கு வருவதாக சிறுமி கூறிய தகவலின் பேரில், அலெக்ஸாண்டர் அங்கு வந்து சிறுமியை தனது சொந்த ஊரான குடியாத்தத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் குடியாத்தம் சென்று சிறுமியை மீட்டனர். இதனையடுத்து அலெக்சாண்டரை கைது செய்து ராயபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
அலெக்சாண்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தால் சிறுமியை கடத்திய வாலிபர்: போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Parimala ,Mangadu Jalani ,Rayapuram ,police station ,Dinakaran ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து