* ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட இந்தியாவின் த்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை தகுதி பெற்றுள்ளது.
* வலது முழங்கால் மூட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்து வந்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், மீண்டும் களமிறங்குவதற்கு தயாராகி உள்ளார். தான் பேட்டிங் வலைப்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
* இந்தியாவுடன் டி20 தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிராண்டன் கிங், ஒபெத் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஓடியன் ஸ்மித், ஒஷேன் தாமஸ்.
* ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் களமிறங்க உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் சுனில் செட்ரி, சந்தேஷ் ஜிங்கான், கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து உள்பட மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
* மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் வியட்னாம் அணியையும், டென்மார்க் 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியையும், இங்கிலாந்து 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவையும் வீழ்த்தின. அமெரிக்கா – போர்ச்சுகல் மோதிய ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. நெதர்லாந்து, அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
* தியோதர் டிராபி தொடரில் வட கிழக்கு மண்டலத்துடன் நேற்று மோதிய வடக்கு மண்டலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வட கிழக்கு மண்டலம் 32.1 ஓவரில் 101 ரன் ஆல் அவுட்; வடக்கு மண்டலம் 12.5 ஓவரில் 102/1 (பிரப்சிம்ரன் 40*, ஹிமான்ஷு ராணா 52*).
* மேற்கு மண்டலத்துக்கு எதிராக கிழக்கு மண்டலம் 157 ரன் வித்தியாசத்தில் வென்றது. கிழக்கு மண்டலம் 50 ஓவரில் 319/7 (ஈஸ்வரன் 38, உத்கர்ஷ் 50, விராத் சிங் 42, ரையன் பராக் 102*, குஷாக்ரா 53); மேற்கு மண்டலம் 34 ஓவரில் 162 ரன் ஆல் அவுட் (ஹர்விக் தேசாய் 92). கிழக்கு மண்டல பந்துவீச்சில் மணிசங்கர் 5, உத்கர்ஷ் 3, ஆகாஷ் தீப், ஷாபாஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.