×

நெமிலி தாலுகாவில் ஆடி பட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்: ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நடவு

நெமிலி: நெமிலி தாலுகாவில், ஆடி பட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள னர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடி பட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். நடவு பணிக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் இயந்திரங்கள் மூலம் நெல் நாற்று நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஆடி மாதத்தில் நெல் விதை விவசாயம் செய்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். இந்த காலத்தில் பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், நல்ல மழையும் கிடைத்து சிறப்பான அறுவடையை கொடுக்கும். கடுமையான கோடையை சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கம் தளர்ந்து இளக தொடங்கும். எனவே, விதைத்த நெல் மணிகள் முளைத்துள்ள நிலையில் தற்போது நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

100 நாள் வேலை உட்பட பல்வேறு பணிகளுக்கு கூலி ஆட்கள் சென்று விடுவதால், விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. எனவே, விவசாயத்தில் இயந்திர பயன்பாடு என்பது அவசியமாகி விட்டது. அதற்கேற்ப நவீன இயந்திரங்கள் வருகையால் வேலையாட்கள் தேவை குறைவதோடு வேலையை விரைவாக முடிக்கவும் முடிகிறது. இயந்திரங்கள் மூலம் குறைந்த நேரத்தில் அதிக பரப்பிலான சாகுபடியும் மேற்கொள்ள முடிகிறது. இதன் மூலம் அதிக லாபம் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நெமிலி தாலுகாவில் ஆடி பட்டத்தில் நெல் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்: ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தில் நடவு appeared first on Dinakaran.

Tags : Aadi Bhatt ,Nemili taluk ,Nemili ,Aadi Pattam ,Ranipet district ,Dinakaran ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...