×

இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 4பேர் கைது

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்ய்துள்ளனர். இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்திவரபடுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து தனுஷ்கோடி கடல் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்ட வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த வலையாக வந்த நாட்டு படகை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது அதிலிருந்து 10 கிலோ எடைகொண்ட தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கம் கடத்திய நான்கு பேரை கைது செய்த அதிகாரிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்தனர். பிறகு மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கடத்தல் காரர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது தங்க கடத்தலுக்கும் வேதாளை பகுதியில் வசிப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து வேதாளை மீனவ கிராமத்திற்கு சென்ற மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் அங்கும் விசாரணை மேற்கொண்டனர். ராமேஸ்வரத்தில் கடத்தல் காரர்கள் இதற்கு முன்பு கடலில் வீசி சென்ற தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது 10 கிலோ கடத்தல் தங்கம் பிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: 4பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameswaram ,Central Revenue Investigation Division ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு