×

தானே கிரேன் விபத்த்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

சென்னை: தானே கிரேன் விபத்த்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்த நிலையில் ஈபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சர்லம்பி கிராமத்தில் கிரேன் மூலம் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாலம் கட்டுமான பணியின் திடீரென போது ராட்சத கிரேன் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தானே கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன், அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

The post தானே கிரேன் விபத்த்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 17 பேர் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்! appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,thane ,edapadi ,Chennai ,EPS ,Crash ,Edappadi ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...