×

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சங்கரன் கோவிலில் கோமதிஅம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்ததற்கு இறங்கி சங்கரலிங்கசாமி தந்து உடலின் வலது புறத்தை சிவனாகவும் இடது புறத்தை விஷ்ணுவாகவும் காட்சி தந்த ஐதீகத்தை ஆண்டுதோறும் பக்தர்கள் ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு விழா கடந்த 21தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகரநிகழ்ச்சியான ஆடித்தபசு விழாவை முன்னிட்டு சங்கரநாராயண சுவாமி ரிஷபவாகனத்தில் கோமதி அம்மனுக்கு காட்சிதரும் நிகழ்வு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதேபோல நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரதை அடுத்த சின்ன சங்கரன் கோவில் சங்கரலிங்கசாமி ஆலயத்தில் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சங்கரநாராயணர் காட்சி மற்றும் சங்கரலிங்கர்சாமி அம்மனுக்கு இடபவாகன காட்சி ஆகியவை தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபெற்றது. ஆடித்தபசு விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் மண்டகப்பட்டிதாரர்களும் இணைந்து செய்திருந்தனர்.

The post தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா..!! appeared first on Dinakaran.

Tags : Tenkasi District ,Sankarankovil Sankarankovil Aditha Pashu Festival ,Tenkasi: ,Aadithapasu festival ,Sankaranarayana ,Swamy temple ,Sankaran Temple, Tenkasi district ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...