×

சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ஆம் தேதி தொடங்கி வைக்கப்படாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ஆம் தேதி தொடங்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வந்தே பாரத் ரயிலை பிரதமர் 6ம் தேதி தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலை சென்னை – நெல்லை வழித்தடத்தில் இயக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலை 2019ம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது. கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இதனால், நாடு முழுவதும் பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 23 ரயில் சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் சென்னைக்கு இரண்டு சேவைகள் கிடைத்துள்ளன. அவை சென்னை – மைசூரு, சென்னை – கோவை ஆகியவை ஆகும்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் சென்னை – நெல்லை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ஆம் தேதி தொடங்கி வைக்கப்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் மோடி 6ம் தேதி தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

The post சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் 6ஆம் தேதி தொடங்கி வைக்கப்படாது: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai-Nellah ,Southern Railway ,Chennai ,Chennai- ,Nellai ,Vande ,Nellah ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...