×

சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

 

க.பரமத்தி, ஆக. 1: க.பரமத்தி அருகே, சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.85க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர் உள்பட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் விளையும் தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்தில் சுமார் 750 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டுவரப்பட்டு ஏலம் நடைபெற்றது.

கொப்பரை தேங்காய் கிலோ சராசரி விலையாக ரூ.80க்கும், முதல் ரகம் அதிகபட்சமாக ரூ.85க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 விலை உயர்ந்து ஏலம் போனது. இதேபோல் தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 21 ஆயிரம் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக ரூ.17க்கும், அதிகபட்சமாக ரூ.26க்கும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Saaliputur ,K. Paramathi ,K. Paramati ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை தேவை