×

ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

 

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளையான அக்கரைபட்டியில் நேற்று ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது. ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில், அக்கரைப்பட்டி ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, ஓ.செளதாபுரம், மதியம்பட்டி அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் 364 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதில், சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ. 7,301 முதல் அதிகபட்சமாக ரூ. 8,147க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

The post ரூ. 11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Akkaraipatti ,Rasipuram Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED ராட்சத பைப் லைன் அமைக்கும் பணி தீவிரம்