×

மக்கள் குறைதீர் கூட்டம்: 336 மனுக்கள் குவிந்தன

 

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 336 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6 பயனாளிகளுக்கு ரூ.30,867 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமாமகேஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மக்கள் குறைதீர் கூட்டம்: 336 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : People's Grievance Meeting ,Ariyalur ,People's Grievance Day Meeting ,Ariyalur District Collector's Office ,Anne Mary ,Dinakaran ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...