×

ஆங்கில மன்ற துவக்க விழாவில் விளக்கம் கோயில் தீ மிதி திருவிழா: மகாலட்சுமி அலங்காரத்தில் திரவுபதி அம்மன்

 

முத்துப்பேட்டை, ஆக. 1: முத்துப்பேட்டை அருகே தீமிதி திருவிழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தெற்குகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தர்மகோயில் திரவுபதி அம்மன்கோயில் தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7ம் தேதி தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று பெருமாள் தேவர் வகையறா மண்டகப்படி சார்பில் பல்வேறுபூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு மகா மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.

The post ஆங்கில மன்ற துவக்க விழாவில் விளக்கம் கோயில் தீ மிதி திருவிழா: மகாலட்சுமி அலங்காரத்தில் திரவுபதி அம்மன் appeared first on Dinakaran.

Tags : English Forum Inauguration Ceremony ,Koil Thee Mithi Festival ,Draupadi ,Muthupet ,Mahalakshmi ,Dirupati Amman Temple ,Dimithi festival ,English Forum Temple Fire Mithi Festival ,Dirupati ,
× RELATED கொள்ளிடம் அருகே திரௌபதி அம்மன் கோயில்...