×

சாயர்புரம் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்

ஏரல், ஆக. 1: சாயர்புரம் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார். சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் சாயர்புரம் சேகர குரு மனோகரன் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன் வரவேற்றார். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு 130 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா எப்சிபாய் நன்றி கூறினார். இதேபோல் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆன்ட்ரூஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தலைமை ஆசிரியர் குணசீலராஜ் வரவேற்றார். 139 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி, ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, துணை தலைவர் பிரியாமேரி, கவுன்சிலர்கள் கண்ணன், ராமமூர்த்தி, முத்துராஜ், ஜெபத்தங்கம் பிரேமா, பிரவீணா, இந்திரா, தெற்கு மாவட்ட காங். துணை தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் காங். தலைவர் இசைசங்கர், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், சொரிமுத்து பிரதாபன், ஜெயசீலன்துரை, மாநில ஊடகப்பிரிவு முத்துமணி, மாவட்ட பொதுச் செயலாளர் சிவகளை பிச்சையா, சாயர்புரம் நகர தலைவர் ஜெயக்குமார் சந்தோஷ், வை. கருப்பசாமி, திருமண்டல நிர்வாக குழு உறுப்பினர் பண்ணைவிளை தேவசகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சாயர்புரம் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Urvashi Amirtharaj ,MLA ,Sairapuram ,Aral ,Urvashi Amritraj ,Sayarapuram ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...