×

ரூ.2,000 கோடி ஆருத்ரா நிதி நிறுவன மோசடி சிறை சென்று வந்த மேலாளர் காரில் கடத்தல்: ரூ.15 லட்சம் கேட்டு தாயை மிரட்டிய 7 பேர் கும்பல் கைது

சென்னை: ரூ.2000 கோடி ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறை சென்று திரும்பிய நிறுவன மேலாளரை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்ைத சேர்ந்தவர் கலா (53). இவர், நேற்று முன்தினம், இரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், , ‘‘எனது மூத்த மகன் செந்தில்குமார் (37). அவரது செல்போனில் இருந்து பேசிய ஒரு மர்ம கும்பல் ‘உனது மகனை கடத்தி வைத்துள்ளோம். அவரை விடுவிக்க 15 லட்ச ரூபாய் தர வேண்டும்.

தரவில்லை என்றால் உன் மகனை பார்க்கவே முடியாது என்றனர். அப்போது அந்த பெண் நகைகளை அடகுவைத்து ஒரு லட்சம் மட்டும் தருகிறேன்’’ என்று கூறியதால் மர்ம கும்பல், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவமனை அருகே வந்துவிடு என்றனர். இதன்பிறகு பணத்துடன் அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து எனது மகனுக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்ததால் பயம் ஏற்பட்டது. பலமுறை தொடர்புகொண்டும் போனை எடுக்கவில்லை. எனது மகனை கடத்தி சென்ற மர்ம கும்பலை கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்களிடம் இருந்து மகனை மீட்டு தரவேண்டும்’’ என தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் போலீசார் செந்தில்குமாரை தேடினர். இந்நிலையில், கலாவிடம் பேசிய செல்போன் நம்பரை கண்காணித்தபோது அந்த டவர் கடைசியாக அம்பத்தூர் பகுதியை காட்டியது. இதையடுத்து நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று அங்கிருந்த அம்பத்தூர் செல்வம் (38), பாலாஜி (27), சரவணன் (27), அஜித்குமார் (27), மணிகண்டன் (27), சிவா (31) மற்றும் விக்னேஷ் (25) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள், அனைவரும் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் என்பதும், கடத்தப்பட்ட செந்தில்குமார் அமைந்தகரை, அண்ணா நகரில் உள்ள ஆருத்ரா நிதி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றியுள்ளதும் தெரியவந்தது.

போலீசாரிடம் கைதானவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘‘அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா நிதி நிறுவனத்தில் மேலாளராக செந்தில்குமார் உள்ளார். இவரை சந்தித்து உங்கள் நிறுவனத்தில் நாங்கள் செலுத்திய பணம் எப்போது கிடைக்கும் என்று பலமுறை கேட்டபோதும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். எனவே, செந்தில்குமாரை கடத்துவதற்கு கடந்த ஒருவாரமாக தொடர்ந்து கண்காணித்தோம். அப்போதுதான் செந்தில்குமாரின் தாயை மிரட்டி பணத்தை வாங்கலாம் என்று நினைத்து அவருக்கு போன் செய்து மிரட்டினோம். ஆனால் அதற்குள் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்’’ என தெரிவித்துள்ளனர்.

The post ரூ.2,000 கோடி ஆருத்ரா நிதி நிறுவன மோசடி சிறை சென்று வந்த மேலாளர் காரில் கடத்தல்: ரூ.15 லட்சம் கேட்டு தாயை மிரட்டிய 7 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.

Tags : Arrutra Finance Company ,Chennai ,Arudra Financial Company ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...