×

இந்து கல்லூரி மாணவர்களுக்கு அகப்பயிற்சி நிறைவு விழா: இயக்குநர் சான்றிதழ் வழங்கினார்

 

திருவள்ளூர்: இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு அகப்பயிற்சி நிறைவு விழாவில் இயக்குநர் சான்றிதழ் வழங்கினார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் அகப்பயிற்சித் திட்டத்தின்கீழ், சொற்குவை வலைத்தளத்தின் பயன்பாடு, கலைச் சொல்லாக்கத்தின் தேவை, மொழி அகராதிகளின் பங்கு, பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேசுதல் உள்ளிட்டவை குறித்த, விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் வகையில், அகரமுதலி இயக்ககத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அகப்பயிற்சிற் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னை, பட்டாபிராம், தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரித் தமிழ்த் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் 21 மாணவ, மாணவிகளுக்கு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அகரமுதலித்திட்ட இயக்ககத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அரசு சான்றிதழ் வழங்கினார்.

The post இந்து கல்லூரி மாணவர்களுக்கு அகப்பயிற்சி நிறைவு விழா: இயக்குநர் சான்றிதழ் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Hindu College ,Thiruvallur ,
× RELATED நாகர்கோவிலில் பொழுது போக்கு...