×

சாகசம் செய்யச் சென்ற போது 68வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான இன்ஸ்டாகிராம் பிரபலம்

ஹாங்காங்: சாகசம் செய்ய நினைத்து 68வது மாடியிலிருந்து கீழே விழுந்து இன்ஸ்டாகிராம் பிரபலம் பலியானார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி. 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். அதனை புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார். கடந்த வாரம், இவர் ஹாங்காங்கிற்கு டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றார். இதற்காக லிப்டில் ஏறி 68வது மாடிக்கு சென்று அங்கு சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார். போலீசார் நடத்திய சோதனையில் அவரின் கேமரா மற்றும் பாஸ்போர்ட்டு கிடைத்தது. இதனை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

The post சாகசம் செய்யச் சென்ற போது 68வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான இன்ஸ்டாகிராம் பிரபலம் appeared first on Dinakaran.

Tags : Instagram ,Hong Kong ,Remy ,France ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!