×

மியான்மரில் அவசரநிலை மேலும் 6 மாதம் நீட்டிப்பு

பாங்காக்: மியான்மரில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் 83% வாக்குகளுடன் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. ஆனால் இதில் முறைகேடு நடந்ததாக கூறி 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது நாட்டில் ஒரு வருடம் அவசரநிலையை அறிவித்தது. அதன் பிறகு, மீண்டும் ஒருமுறை அவசரநிலையை நீட்டித்தது. இந்நிலையில், ராணுவத்தின் கீழ் செயல்படும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நேபிடாவ் நகரில் நடந்தது. இதில் தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்புகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அவசரநிலையை மீண்டும் நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மேலும் 6 மாத காலத்துக்கு அவசரநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post மியான்மரில் அவசரநிலை மேலும் 6 மாதம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Bangkok ,Aung San Suu Kyi ,2020 general election ,Dinakaran ,
× RELATED மியான்மர் நாட்டில் அதிகாலை 2.18 மணிக்கு மிதமான நிலநடுக்கம்!