×

கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பாகிஸ்தான் பெண் கைது

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அருகே சுற்றித் திரிந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் கோ சி மின் பகுதியில் அமெரிக்க துணைத்தூதரகம் உள்ளது. இந்த பகுதி மிகவும் பாதுகாப்பட்ட ஒன்று. இந்த இடத்தில் 20 வயதிற்குட்பட்ட பெண் சுற்றித்திரிந்தார். சிசிடிவி காட்சிகளில் இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரை பிடித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கூட்டாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவர் ஒரு அழகுக்கலை நிபுணர் என்பதும், கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு 2021 டிசம்பர் முதல் இங்கு வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் பாகிஸ்தான் பெண்ணின் இந்திய விசா 2024 ஜனவரி வரை செல்லுபடியாகும் என்பதால் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பாகிஸ்தான் பெண் கைது appeared first on Dinakaran.

Tags : US embassy ,Kolkata ,US Consulate ,West Bengal ,Dinakaran ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...