×

கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தான் சென்ற ரூ20 லட்சம் மதிப்பிலான தக்காளி லோடு லாரி மாயம்: டிரைவர் கடத்தியிருக்க வாய்ப்பு; போலீஸ் விசாரணை

கோலார்: கோலாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்ற தக்காளி லோடு லாரி திடீரென மாயமானதால், போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் கோலார் ஏபிஎம்சி யார்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வேளாண் விளைபொருட்கள் லாரியில் சப்ளை செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 27ம் தேதி ஏபிஎம்சி யார்டில் இருந்து ஜெய்ப்பூருக்கு தக்காளி லோடு அனுப்பப்பட்டது. அதாவது 15 கிலோ கொண்ட பெட்டிகளாக ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தக்காளி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தக்காளி லோடு லாரி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு ஜெய்ப்பூரை சென்றடைய வேண்டும்.

ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் லாரி ஜெய்ப்பூருக்கு சென்று அடையவில்லை. லாரி ஓட்டுநரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. லாரியின் கிளீனரிடம் செல்போன் இல்லாததால், லாரியை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சந்தேகமடைந்த கோலார் மார்க்கெட் வியாபாரிகள் ேபாலீசில் புகார் அளித்தனர். அவர்கள் லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் டிராக்கரை ஆய்வு செய்த போது, கோலாரில் இருந்து சுமார் 1,600 கிமீ தூரம் வரை சென்ற லாரி, அதன்பின் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘லாரிக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டிருந்தால், இந்நேரம் தகவல் வந்திருக்கும்.

ஆனால் லாரி எங்கு சென்றது என்பது தெரியவில்லை. தக்காளி லோடு லாரியை, அதன் டிரைவரே கடத்தியிருக்கலாம். தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. ெதாடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ. 200 வரை உயர்ந்துள்ள நிலையில், சாகுபடி செய்யப்பட்ட தக்காளியை பாதுகாப்பதும், பயிரிடப்பட்ட தக்காளிக்கு காவல் காப்பதும், சந்தைகளில் வேலைக்கு ஆட்களை போட்டு பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தக்காளி லோடு லாரி கடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கர்நாடகாவில் இருந்து ராஜஸ்தான் சென்ற ரூ20 லட்சம் மதிப்பிலான தக்காளி லோடு லாரி மாயம்: டிரைவர் கடத்தியிருக்க வாய்ப்பு; போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Rajasthan ,Kolar ,Jaipur ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...