×

இலங்கை அகதிகள் 4 பேர் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர். இலங்கை வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (36). இவரது மனைவி மேரி (31). இவர்களது குழந்தைகள் கிருத்திகா (7), கிருஸ்மிதா (4). பிரதீப்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு நேற்றிரவு 10 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் இவர்களை இறக்கிவிட்ட படகு மீண்டும் இலங்கை திரும்பி சென்று விட்டது.

பிரதீப்குமார் உட்பட 4 பேரும் விடியும் வரை கோதண்டராமர் கோயில் பகுதியிலேயே காத்திருந்தனர். இன்று அதிகாலை தகவல் கிடைத்து அங்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘தொழில் வாய்ப்பு இல்லாமல் குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்ததால் படகிற்கு கட்டணமாக ரூ.1 லட்சம் இலங்கை பணம் கொடுத்து ராமேஸ்வரம் வந்ததாக தெரிவித்தனர். விசாரணைக்குப்பின் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

The post இலங்கை அகதிகள் 4 பேர் வருகை appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Sri Lanka ,Vavuniya ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு