×

தேசிய கொடியை அவமதித்த 18 பேர் மீது வழக்கு

ராஞ்சி: தேசிய கொடியை அவமதித்த 18 பேர் மீது ஜார்கண்ட் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அடுத்த ஷாஹ்பூர், கல்யாண்பூர், கன்காரி போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட மதத்தினரின் திருவிழா ஊர்வலம் நடந்தது. அப்போது அதிக ஒலியுடன் பாடல்கள் பாடி டிஜேக்கள் இசைக்கப்பட்டது. ஊர்வலத்தில் ஈடுபட்ட சிலர் இந்திய தேசியக் கொடியை வைத்திருந்தனர். அந்த கொடியின் மையத்தில் அசோக சக்கரம் இல்லை. மாறாக குறிப்பிட்ட மொழியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. மேலும் அந்த வார்த்தைகளுக்கு கீழே வாள் போன்ற குறியீடும் இருந்தது.

இதுபோன்ற கொடியை ஊர்வலத்தில் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய தேசிய கொடியை அவமதித்ததாகவும் கூறப்பட்டது. சமூக வலைதளங்களிலும் வீடியோ வெளியானது. அதனால் செயின்பூர் போலீசார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 13 பேர் உட்பட 18 பேர் மீது தேசிய சின்னங்களை அவமதிப்பதை தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தேசிய கொடியை அவமதித்த 18 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Jharkhand police ,Jharkhand ,Dinakaran ,
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!