×

ஜெய்ப்பூர் ரயிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஏஎஸ்ஐ வீரருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் ரயிலில் ஆர்பிஎப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ வீரரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி அளிப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சென்றுக் கொண்டிருந்தது.

நீராரோடு ரயில் நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் திடீரென்று பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் உதவி ஆய்வாளர் திகாராம் மீனா உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவலர் சேத்தன் சிங், தகிசர் ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் 4 பேரை சுட்டுக் கொன்ற சேத்தன் சிங்கை துரத்திச் சென்ற காவல்துறையினர், பெரும் தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை கைது செய்து தானியங்கி துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ஆர்.பி.எஃப். காவலர் சேத்தன் குமாரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெய்ப்பூர் ரயிலில் ஆர்பிஎப் வீரரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஏஎஸ்ஐ வீரரின் குடும்பத்திற்கு ரூ. 15 லட்சம் நிதி அளிப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வீரரின் இறுதிச்சடங்கிற்கு ரூ. 20,000, மேலும் பொது காப்பீட்டுத் தொகையாக ரூ. 65,000 வழங்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

The post ஜெய்ப்பூர் ரயிலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஏஎஸ்ஐ வீரருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்: ரயில்வே துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ASI ,Jaipur ,Railway Department ,RPF ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...