×

தென்மேற்கு ரயில்வேயில் 904 அப்ரன்டிஸ்

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வே பணிமனையில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 904.
வயது வரம்பு: 02.08.2023 தேதியின்படி 15 முதல் 24க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சியளிக்கப்படும். தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள்: Fitter/Welder/Electrician/A/c Mechanic/PASAA/Machinist/Carpenter/Painter/Stenographer/Diesel Mechanic.

கட்டணம்: ரூ 100/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து விட்டு www.rrchubli.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.08.2023.

 

The post தென்மேற்கு ரயில்வேயில் 904 அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.

Tags : Southwest Railway ,South ,West Railway Workshop ,Indian Railways ,Southwest Railway 904 ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...