×

காரைக்குடி எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி: சயின்டிஸ்ட்
மொத்த இடங்கள்: 18 (பொது6, பொருளாதார பிற்பட்டோர் 2, ஒபிசி2, எஸ்சி2, எஸ்டி5, மாற்றுத்திறனாளி1). வயது: 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ 67,700. தகுதி: Chemistry/ Chemical Sciences/Physics/Physical Sciences ல் பி.எச்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineeringல் எம்.இ.,/எம்.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: ₹500/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. https://www.cecri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.7.2023.

The post காரைக்குடி எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Karaikudi Electrochemical Research Center ,Karaikudi Electrochemical Research Centre ,Sivagangai District ,Department of Science and Technology ,the Union Government ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியம் பெற இ-சேவை மையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்