×

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் விமானக் கண்காட்சி நிறைவு; வண்ண வண்ண புகையை கக்கியபடி வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய விமானங்கள்..!!

ஜிலின்: சீனாவின் ஜிலின் மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த விமான கண்காட்சி கண்கவர் சாகச நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. சீனாவின் ஜிலின் மாகாணத்தில் ஷன்ஷங் நகரில் 5 நாட்களாக விமான கண்காட்சி நடைபெற்றது. இதை 6 லட்சத்து 50 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். கடைசி நாளில் விதவிதமான போர் விமானங்கள் ராணுவ சரக்கு விமானங்கள், வண்ண வண்ண புகையை கக்கியபடி வானில் வர்ண ஜாலம் நிகழ்த்தின. இதை பார்த்த பார்வையாளர்கள் சிலிர்ப்பில் மூழ்கினர்.

அத்துடன் சீன ராணுவம் வான்படையினரின் நேர்த்தியான அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விமான கண்காட்சியில் ஜே 16 ஜெட் ரக போர் விமானங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், பயிற்சி விமானங்கள் இடம் பெற்றிருந்தன. நாளை மறுநாள் சீன மக்கள் விடுதலை படையினர் 96வது நிறுவன நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதை முன்னிட்டு இந்த விமான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் 13 வகையான 45 விமானங்கள் இடம்பெற்றன.

The post சீனாவின் ஜிலின் மாகாணத்தில் விமானக் கண்காட்சி நிறைவு; வண்ண வண்ண புகையை கக்கியபடி வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய விமானங்கள்..!! appeared first on Dinakaran.

Tags : China ,Jilin Province Air Show ,Jilin ,Jilin Province ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...