×

வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற பி.ஆர். பாண்டியனுக்கு போலீசார் அனுமதி மறுப்பு

 

சேத்தியாத்தோப்பு, ஜூலை 31: வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற பி.ஆர்.பாண்டியனுக்கு போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் சார்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் விளைநிலங்களை பார்வையிட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சென்றார்.

அப்போது அவரை 5 கிலோ மீட்டருக்கு முன்பே சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கூறியதாவது, விவசாயிகளையும், பொது மக்களையும் வளம் கொழிக்கும் விளைநிலங்களையும் அழித்துவிட்டுசுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களையும், பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூற சென்றேன். ஆனால் போலீசார் என்னை தடுத்து நிறுத்தி விட்டனர் என்றார்.

The post வளையமாதேவி கிராமத்துக்கு சென்ற பி.ஆர். பாண்டியனுக்கு போலீசார் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : B.R. ,Brangamadevi ,Pandian ,Chetiathoppu ,BR Pandian ,Cuddalore district ,Chethiyathoppu ,PR ,Arangamadevi ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஜான்பாண்டியன் குடும்பத்தினருடன் வாக்களிப்பு