×

புதிய ரேசன் கடை திறப்பு

 

பரமக்குடி, ஜூலை 31: போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேமனூர் கிராம ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் சேமனூர் கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என சேமனூர் கிராம மக்கள் சார்பாக பரமக்குடி எம்எல்ஏ முருகேசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் திறந்து வைத்தார். போகலூர் ஒன்றிய செயலாளர் கிழக்கு கதிரவன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், போகலூர் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பதக்காதவதி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post புதிய ரேசன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,MLA ,Seemanur ,Pokalur ,Dinakaran ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்