×

விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, ஜூலை 31: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் கீழ் இயங்கும் விற்பனையாளர் பணியிடத்திற்கு, விருப்பம் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், சென்னை, மதுரை, மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கீழ் இயங்கும் விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் www.petrolpumpdealerchayan.in என்ற இணையதள முகவரி வாயிலாக, செப்டம்பர் 27க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விற்பனையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Salesman ,Bharat Petroleum Corporation Limited ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்