×

சிண்டிகேட் அமைத்து 100க்கு தக்காளி விற்பனை

 

போச்சம்பள்ளி, ஜூலை 31: போச்சம்பள்ளி சந்தையில், வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து தக்காளி கிலோ ரூ.70க்கு வாங்கி ரூ.100க்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் அதிரடி விலை உயர்வை கண்டுள்ள தக்காளிக்கு மவுசு அதிகரித்து உள்ளது. சமையல் அறையில் மட்டுமே இடம் பிடித்து இருந்த தக்காளி விலை உயர்வால், சீர் வரிசை தாம்பூலத்தில் இடம் பெற்றத்துடன் பிறந்த நாள், திருமணம் போன்ற நிகழ்ச்சிக்களுக்கு வழங்கப்பட்டும் பரிசு பொருளாக மாறி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தக்காளி சாகுபடி அதிகாரிப்பால் விலை குறைந்தது. ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து, தக்காளியை ஏரியில் உள்ள மீன்களுக்கு உணவாக கொட்டி சென்றனர்.

இந்நிலையில், பல்வேறு காரணங்களால் தக்காளி விலை திடீரென உயர்ந்து கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை உயர்வால் குடும்ப பெண்கள், மற்றும் ஓட்டல்கள் கடைகளில் தக்காளியை பயன்படுத்துவதையே நிறுத்தி விட்டனர். மேலும், தோட்டங்களில் தக்காளி திருடு போகாமல் இருக்க பாதுகாப்பு பணியில் விவசாயிகள் இரவு கண் விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளியை, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து கிலோ ரூ.70க்கு வாங்கி ரூ.100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

The post சிண்டிகேட் அமைத்து 100க்கு தக்காளி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bochampally ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...