×

ஆதிவாசிகள் அமைப்பின் அகில இந்திய மாநாடு

 

நாமக்கல், ஜூலை 31: நாமக்கல்லில், ஆதிவாசிகள் அமைப்பின் அகில இந்திய மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு சார்பில், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 3 நாட்கள் நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைப்பு குழு செயலாளர் வேலுசாமி வரவேற்றார்.

மாநாட்டு வரவேற்பு குழுவின் குழு தலைவராக அரூர் முன்னாள் எம்எல்ஏவும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவருமான டெல்லி பாபு, செயலாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு செயலாளர் பெருமாள், பொருளாளராக இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநில தலைவர் கண்ணன் மற்றும் விவசாய சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ரங்கசாமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பன் ஆகியோர் புரவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கி 3 நாட்கள் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4வது அகில இந்திய மாநாடு நாமக்கலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்து 18மாநிலங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வந்து கலந்து கொள்ள உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post ஆதிவாசிகள் அமைப்பின் அகில இந்திய மாநாடு appeared first on Dinakaran.

Tags : All ,India Conference of ,Adivasis ,Organisation ,Namakkal ,India Conference of Adivasi Organization ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...