×

விராலிமலை கோரை ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய வேன் பறிமுதல்

 

விராலிமலை, ஜூலை31: விராலிமலை அருகே மணல் கடத்த பயன்படுத்திய வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதன் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விராலிமலை சுற்றுப்பகுதி ஆற்றுப்படுகைகளில் இருந்து பொக்லேன் இயந்திரம் மூலம் ஆற்று மணல், சரளை மண் அள்ளப்பட்டு லாரி, டிராக்டர், லோடு வாகனங்களில் கடத்தி சுற்றுப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து விராலிமலை டிஎஸ்பி குமார் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகேயுள்ள துலுக்கம்பட்டி கோரையாற்று பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது கோரை ஆற்று பகுதியில் இருந்து வந்த டாடா 407 வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி ஒரு யூனிட் ஆற்று மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அதன் உரிமையாளர் துலுக்கம்பட்டியைச் சேர்ந்த பாலுச்சாமி மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர் மேலு்ம போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விராலிமலை கோரை ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய வேன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Viralimalai Korai river ,Viralimalai ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...