×

சில்லி பாயிண்ட்

* சீனாவின் செங்கடுவில் நடைபெறும் உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை ஆட்டத்தின் குழு பிரிவில் இந்திய வீரர்கள் சங்கமாபிரீத், அமன் சைனி, ரிஷப் யாதவ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் 4வது நாளான நேற்று இங்கிலாந்து 395ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்த டெஸ்ட் உடன் ஓய்வு அறிவித்துள்ள வேகம் ஸ்டூவர்ட் பிராட் 8ரன்னுடன் களத்தில் இருந்தார். அதிலும் தான் சந்தித்த கடைசிப் பந்தில் சிக்சர் விளாசினார். அதனையடுத்து 384ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. இன்று ஆட்டத்தின் கடைசி நாள்.

* ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாட உள்ள ஜப்பான், கொரிய அணிகள் நேற்றிரவு சென்னை வந்தடைந்தன. இந்திய அணி நாளை பிற்பகல் சென்னை வருகிறது.

* பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு வினா விடைப் போட்டி ஆக.18ம் தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள த னியார் பள்ளியில் நடைபெற உள்ளது. பரிசுத்தொகை ரூ.1.5லட்சம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் gialquiz@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொள்ளலாம்.

The post சில்லி பாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Silly ,Point ,World University Games ,Shengadu, China ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்