×

சில்லி பாயின்ட்…

* சிட்னி நகரில் நடக்கும் ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, கிரண் ஜார்ஜ் ஆகியோரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உபாத்யாயா, மாளவிகா மன்சூத் ஆகியோர் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் ரெட்டி/சிக்கி ரெட்டி இணையும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

*  உலக கோப்பை 2026, ஆசிய கோப்பை 2027 கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான 2வது தகுதிச் சுற்றின் ஏ பிரிவில் இந்தியா விளையாடி வந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் கத்தாரிடம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்தியாவின் உலக கோப்பை கனவு மீண்டும் கலைந்தது. இந்த போட்டியில் கத்தார் அணி அடித்த 2வது கோல், பந்து எல்லைக் கோட்டை கடந்த பிறகு விதிமுறைகளுக்குப் புறம்பாக அடிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏ பிரிவில் கத்தார் (16), கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய குவைத் (7 புள்ளி) 3வது சுற்றுக்கு முன்னேறின.

* காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு நேற்று வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் 3 மாத காலத்துக்கு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்பெயின் அணிக்காக நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால் – கார்லோஸ் அல்கராஸ் இணைந்து விளையாட உள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : India ,Australia Open Badminton Series ,Sydney ,S. Pranai ,Sameer Verma ,Kiran George ,Akarshi Kashyap ,Anupama Upadhyaya ,Malavika Manchood ,Dinakaran ,
× RELATED மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம்...