×

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 2 கட்டிடங்கள் சேதம்: விமான நிலையம் தற்காலிக மூடல்

மாஸ்கோ: அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டை கடந்து நீடித்து வரும் போரில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் சிதிலம் அடைந்து விட்டன. பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து விட்டனர். அமெரிக்கா, ஜெர்மன், போலந்து உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் சுதந்திரம் இப்போதே வென்றெடுக்கப்பட வேண்டும். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும் என உக்ரைன் அதிபர் விளாடிமிஜர் ஜெலன்ஸ்கி சூளுரை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது 3 சிறிய டிரோன்களில் வெடிகுண்டுகளை நிரப்பி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு டிரோனை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. மேலும் 2 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டன. அவை மாஸ்கோவில் உள்ள கட்டிடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 2 கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் ஒரு காவலாளி படுகாயமடைந்தார். இந்த தாக்குதல்களை தொடர்ந்து மாஸ்கோவை சுற்றியுள்ள விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன.

The post மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 2 கட்டிடங்கள் சேதம்: விமான நிலையம் தற்காலிக மூடல் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Moscow ,US ,NATO alliance ,Russia ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு