×

மங்களூரு குண்டுவெடிப்பில் லஷ்கர் தீவிரவாதிக்கு தொடர்பு: என்ஐஏ விசாரணையில் தகவல்

நாக்பூர்: மங்களூரு குண்டுவெடிப்பில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளான் என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.கர்நாடகா,மங்களூருவில் கடந்த ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் ஒரு ஆட்டோ சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் முகமது ஷாரீக் என்பவனை கைது செய்தனர். இதற்கிடையே, கடந்த ஜனவரி 14ம் தேதி நாக்பூரில் உள்ள ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ரூ.100 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். அதன் பின்னர் மார்ச் 21ம் தேதி கட்கரி அலுவலகத்துக்கு மீண்டும் ஒரு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ரூ.10 கோடியை தராவிட்டால் கட்கரியை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு குழு(என்ஐஏ) பெலகாவி சிறையில் இருந்த ஜெயேஷ் பூஜாரியை கைது செய்து நாக்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது. விசாரணையின் போது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்சர் பாஷா என்பவருடன் சேர்ந்து ஜெயேஷ் பூஜாரி கைதிகளை தீவிரவாத செயல்களை ஈடுபட வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அப்சர் பாஷாவை என்ஐஏ கைது செய்து நாக்பூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் மங்களூரு குண்டுவெடிப்பில் சம்மந்தப்பட்ட முகமது ஷாரீக் சிறையில் இருந்த போது குக்கர் வெடிகுண்டு தயாரிக்க கற்று கொடுத்துள்ளார். அதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அப்சர் பாஷாவின் வங்கி கணக்குக்கு ரூ.5 லட்சம் செலுத்தியதும் தெரியவந்துள்ளது.

The post மங்களூரு குண்டுவெடிப்பில் லஷ்கர் தீவிரவாதிக்கு தொடர்பு: என்ஐஏ விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mangaluru ,Lashkar ,NIA ,Nagpur ,e-Taiba ,Mangalore ,Mangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்