×

மணிப்பூர் சென்றுள்ள I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயாவுடன் சந்திப்பு!

இம்பால்: 21 கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய I.N.D.I.A எனப்படும் எதிர்கட்சிகளின் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ள நிலையில், இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே-வை சந்தித்தனர்.

I.N.D.I.A எனப்படும் எதிர்கட்சிகளின் 21 கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றனர். அங்கு வன்முறையால் பாதிக்கபட்ட மக்களை நெரில் சந்திக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் மணிப்பூர் சென்றதாக I.N.D.I.A கூட்டணி குழு அமைப்பின் எம்.பி.க்கள் குழு தெரிவித்தது.

வெவ்வேறு முகாம்களில் தங்க வைக்கபட்டிருந்த பாதிக்கபட்ட மக்களை அவர்கள் சந்தித்தும், ஆறுதல் தெரிவித்தும் அவர்களுக்கு தேவையான வற்றை கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே-வை சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர். அவர்களுக்கு அனுமதி வழங்கபட்டதை அடுத்து இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இதனை தொடர்ந்து எம்.பி.க்கள் குழு இன்று மாலை டெல்லி திரும்புகிறது.

மணிப்பூருக்கு அடிகடி வரும் ஒரேகுழு எங்களது குழுதான், பிரதமர் அனைத்து கட்சி குழுவையும் வழிநடத்த விரும்பினால், அதில் நாங்கள் ஒருபகுதியாக இர்ருப்பதில் மகிழ்சியடைவோம். அமைதியை நிலைநாட்ட நாங்கள் விரும்புகிறோம், அதற்காகவே நாங்கள் மணிப்பூர் சென்றோம். சுமார் 85 நாட்களுக்கும் மேலாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தொடந்து, பிரதமர் மௌனம் சாதித்து வருகிறார் என தொடர்ந்து பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்கட்சியினர் வைத்தனர்.

The post மணிப்பூர் சென்றுள்ள I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயாவுடன் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Manipur Coalition Party M. GP ,Governor ,Anusuya ,Imphal ,Manipur ,Manipur I.N.D.I.A. Coalition Party M. GP ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி 300...