×

பெரும்பாறை அருகே மலைச்சாலை ஓரங்களில் குவிந்துள்ள மரங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை, தாண்டிக்குடி பகுதியில் மலைச்சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மரங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. பெரும்பாறை, தாண்டிக்குடி பகுதியில் மலைத்தோட்ட விவசாயிகளின் பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெட்டப்படும் மரங்கள் சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மரங்கள் உள்ள பகுதிகளில் எந்த வித எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை. இதனால் மலைச்சாலையில் செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டு வருகின்றன.

மலைச்சாலை என்பது மிகவும் குறுகியதாகவே இருப்பது வழக்கம். இதற்கிடையே சாலையோரங்களில் மரங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் இந்த மரங்களை அகற்றுவதோடு, இதுபோல் மரங்கள் குவித்து வைப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரும்பாறை அருகே மலைச்சாலை ஓரங்களில் குவிந்துள்ள மரங்கள்: விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Perumparai ,Pattiveeranpatti ,Thandikudi ,Perumparai, Thandikudi ,Perrumparai ,Dinakaran ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...