×

மலட்டாற்றில் மணல் அள்ளிய நான்கு பேர் மீது வழக்கு

ராமநாதபுரம், ஜூலை 30: கடலாடி அருகே கே.வேப்பங்குளம், மங்களம்,ஆப்பனூர் பகுதியில் செல்லக் கூடிய மலட்டாற்றில் நல்ல மணல் வளம் உள்ளது. இங்கு அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்தநிலையில் சிலர் பட்டா இடங்களில் விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக மணல் அள்ளி விலைக்கு விற்று வந்தனர்.

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்திரவின் பேரில் ராமநாதபுரம் கனிம வளம் உதவி இயக்குனர், கடலாடி தாசில்தார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கே.வேப்பங்குளம் மலட்டாறு ஆற்றுபடுகை யோர தனியார் பட்டா இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மணல் அள்ளியும், அதனை டிராக்டர்களில் ஏற்றி விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் ரங்கராஜூ கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் முனியாண்டி மகன் செந்தூர்பாண்டி(55), ராமு மகன் மூக்காண்டி(52), குமரையா மகன் மூக்காண்டி, குமரையா மகன் செந்தூர் பாண்டி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மலட்டாற்றில் மணல் அள்ளிய நான்கு பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,K. Veppankulam ,Mangalam ,Appanur ,Cuddaly ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை...