×

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா துணை நிற்க வேண்டும்: மாஜி பிரதமர் நெய்லா குவாட்ரி கோரிக்கை

ஹரித்துவார்: பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என பலுசிஸ்தான் முன்னாள் பிரதமர் நெய்லா குவாட்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் பலுசிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நெய்லா குவாட்ரி உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு, பலுசிஸ்தானை பாகிஸ்தான் பிடியில் இருந்து மீட்க ஆதரவு திரட்டி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு வந்த நெய்லா குவாட்ரி கங்கையில் பூஜைகள் மற்றும் வழிபாடு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குவாட்ரி கூறும்போது, “ஒருகாலத்தில் சுதந்திர நாடாக இருந்த பலுசிஸ்தான் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. பலுசிஸ்தான் மக்கள் அனைத்து வகையாக கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பலுசிஸ்தான் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதையெல்லாம் சீனாவுடன் சேர்ந்து பாகிஸ்தான் செய்து வருகிறது. இந்தியாவும், பலுசிஸ்தானும் மதத்தின் பெயரால் பிரிக்கப்படுகின்றன. இருநாடுகளுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. ஐக்கியநாடுகள் அவையில் பலுசிஸ்தானுக்கு ஆதரவாக பேச இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது. பலுசிஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும். எங்களுக்கு இந்தியா துணை நின்றால் நாங்களும் அவர்களுக்கு துணையாக இருப்போம்” என்றார்.

The post பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தான் விடுதலை பெற இந்தியா துணை நிற்க வேண்டும்: மாஜி பிரதமர் நெய்லா குவாட்ரி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Balochistan ,Pakistan ,Former ,Naila Quadri ,Haridwar ,Naila ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!