×

சண்டாள பாவிகளா…இப்படியா இருப்பீங்க… அதிமுகவினரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன்

சிவகாசி: சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கட்சியினரை திண்டுக்கல் சீனிவாசன் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மதிய உணவு நேரம் என்பதால் சில தொண்டர்கள் உணவு ஏற்பாடு ஆகி விட்டதா என கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘சாப்பாட்டிற்கு நேரம் ஆகிவிட்டதால் ஒருவர் மணியை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒருவர் பின்பக்க கதவை திறந்து செல்கிறார். ஒருவர் இந்த கதவை திறந்து செல்கிறார். சண்டாள பாவிகளா… பயலுகளா இப்படியா இருப்பீங்க..? ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஓபிஎஸ்சும், டிடிவியும் சேர்ந்து எம்பி தேர்தலை சந்திக்க போகின்றனராம். தஞ்சாவூரில் நீங்கள் நின்று பாருங்கள். உங்கள் ஜாதிக்காரன் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா என்று பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சால் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.

The post சண்டாள பாவிகளா…இப்படியா இருப்பீங்க… அதிமுகவினரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : Dindigul Srinivasan ,AIADMK ,Sivakasi ,Virudhunagar district ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை