×

திருப்பத்தூர் அருகே சடலத்தை தோளில் சுமந்தபடி வெள்ளத்தை கடந்த மக்கள்: தரைபாலம் கட்டித்தர கோரிக்கை

 

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் அடுத்த பூரிகமானிமிட்டா பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு இறந்தவரின் சடலங்களை அருகாமையில் உள்ள ஆற்றின் மற்றொரு கரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் வரும்போது சடலத்தை தோளில் சுமந்து ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு தரைப்பாலம் அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சேட்டு மனைவி மல்லிகா(50) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

அவரது சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் அதிகளவு வெள்ளம் சென்றது. இதனால் பொதுமக்கள், ஆபத்தான முறையில் வெள்ளத்தில் இறங்கி சடலத்தை தூக்கிச்சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். எனவே இந்த பகுதியில் தரைப்பாலம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருப்பத்தூர் அருகே சடலத்தை தோளில் சுமந்தபடி வெள்ளத்தை கடந்த மக்கள்: தரைபாலம் கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Jolarpet ,Purigamanimita ,
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...