×

சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சூட்கேஷில் ‘கிரிப்டோகரன்சி’ தொழிலதிபரின் சடலம் மீட்பு: அர்ஜென்டினாவில் பயங்கரம்

பியூனஸ்: அர்ஜென்டினாவில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிரபல கிரிப்டோகரன்சி பிஸினஸ்மேன் பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவரின் சடலம் சூட்கேஷில் மீட்கப்பட்டது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த கிரிப்டோகரன்சி பிஸினஸ்மேன் பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவரின் சடலம், தலைநகர் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் அமைந்துள்ள நீரோடைக்கு அருகில் சூட்கேஷில் கண்டெடுக்கப்பட்டது. நீரோடை பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்கள் அங்கு கிடந்த சூட்கேஷை பார்த்து அவர்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பின்னர் நடந்த விசாரணையில், சூட்கேஷில் அடைத்து வீசப்பட்டது, பெர்னாண்டோ பெரெஸ் அல்காபாவின் உடல்பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா மாயமானதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அவரை ேதடி வந்த நிலையில், சூட்கேஷில் அடைக்கப்பட்ட அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட அல்காபாவின் கால்கள், முன்கைகள் தனித்தனியாக வெட்டப்பட்டிருந்தன. தலை, உடற்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.

மீட்கப்பட்ட உடல் பாகங்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிரிப்டோகரன்சி பிஸினஸ் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்த இவரை கொன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். எதற்காக அல்காபா கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், கடன்கள் அதிகமானதால் கடன் கொடுத்தவர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றனர்.

The post சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சூட்கேஷில் ‘கிரிப்டோகரன்சி’ தொழிலதிபரின் சடலம் மீட்பு: அர்ஜென்டினாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Argentina ,Buenos Aires ,Fernando Perez Alcaba ,Argentina.… ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்