×

சென்னையில் ரூ.3.82 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. தொடங்கி வைத்தனர்..!!

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-59, அண்ணா சாலை, சத்தியவாணி முத்து நகரில் 2022-23ஆம் ஆண்டிற்கான வெள்ள நிவாரண நிதியின் கீழ், ரூ.2.77 கோடி மதிப்பிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டிற்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், வார்டு-60, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள சென்னை உருது பள்ளியில் ரூ.24.50 லட்சம் மதிப்பில் கட்டடம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் பணியினையும், மூர் தெரு மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெருவில் ரூ.10.50 லட்சம் மதிப்பில் சாலை பணியினையும் தொடங்கி வைத்தனர்.

பின்னர், வார்டு-56, வெங்கட மேஸ்திரி தெருவில் உள்ள பல்நோக்கு மையக் கட்டடத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான முகாமினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார்கள். மேலும், 2022-23ஆம் ஆண்டிற்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.35 லட்சம் மதிப்பில் புதியதாக முதல் தளம் கட்டும் பணியினையும், வார்டு-54க்குட்பட்ட அம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தும் பணியினையும், ரூ.6 லட்சம் மதிப்பில் உட்வார்ஃப் 1ஆவது சந்தில் உள்ள அங்கன்வாடி மையத்தினை மேம்படுத்தும் பணியினையும், ரூ.9 லட்சம் மதிப்பில் சரவணன் தெருவில் உள்ள சாலையோரப் பூங்காவினை மேம்படுத்தும் பணியினையும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, இராயபுரம் மண்டலம், யானைகவுனி பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.27.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்ப் பணிகளை இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே.சேகர் பாபு , நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கல்யாணபுரத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலகர்களுக்கு அறிவுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக இராயபுரம் மண்டல அலுவலகத்தில் அறநிலைத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., , மண்டலக்குழுத் தலைவர் பி.ஶ்ரீராமுலு, தலைமை பொறியாளர் (பொது) எஸ். இராஜேந்திரன் , மாமன்ற உறுப்பினர்கள் மண்டல அலுவலர் மற்றும் இரயில்வே அலுவலர்கள் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சென்னையில் ரூ.3.82 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. தொடங்கி வைத்தனர்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Dayanidi Maran ,M.M. GP ,Chennai ,Metropolitan ,Corporation ,Iraipuram Zone ,Ward 59 ,Anna Road ,Satyawani Pearl Nagar ,Segarbabu ,Dayaniti Maran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...