×

கொரட்டூரில் நள்ளிரவில் நில அதிர்வு போல் குலுங்கிய கட்டிடம்.. குடியிருப்புவாசிகள் குடும்பங்களுடன் சாலையில் தஞ்சம்

சென்னை : சென்னை கொரட்டூரில் நில அதிர்வு போல் வீடுகள் குலுங்கியதால் பதற்றம் அடைந்த குடியிருப்பு வாசிகள் குடும்பங்களுடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர். சென்னை கொரட்டூர் காவல் நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி விற்கப்பட்ட கோல்டன் 222 பிளாட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 9 மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் 180 வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நில அதிர்வை உணர்ந்த குடியிருப்பு வாசிகள், குடும்பத்தினருடன் கட்டிடத்தை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த திடீர் நில அதிர்வுக்கு என்ன காரணம் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. அதேபோல இதனால் கட்டிடத்தில் எதாவது மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. குடியிருப்பு மற்றும் கட்டுமானம் தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் நீண்ட காலங்களாக இருப்பதாகவும் அதனை உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொரட்டூரில் நள்ளிரவில் நில அதிர்வு போல் குலுங்கிய கட்டிடம்.. குடியிருப்புவாசிகள் குடும்பங்களுடன் சாலையில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Koratur ,Chennai ,Chennai Koratur ,Dinakaran ,
× RELATED இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது