×

பழநி சண்முகநதியின் கரையில் ரூ.1.46 கோடியில் நவீன தகன மேடை: கட்டுமான பணிகள் தீவிரம்

 

பழநி, ஜூலை 29: பழநி சண்முகநதியின் கரையில் ரூ.1.46 கோடியில் நவீன தகன மேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. பழநி நகரில் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தவிர, சிவகிரிப்பட்டி, பாலசமுத்திரம், கோதைமங்கலம் பகுதிகளிலும் சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கான எரிவாயு மின் மயானம் ராமநாத நகர் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இதன்படி, நகரில் ஒரே தகன மையம் மட்டும் இருப்பதால் உடல்களை தகனம் செய்வதற்கு பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பழநி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சண்முகநதியின் கரையோரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.1.46 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்படுகிறது. 3 ஆயிரம் சதுர அடியில் கட்டுமான பணி, இதர பயன்பாடுகளுக்கு 3 ஆயிரம் சதுர அடியும், தவிர காலி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தவிர தகனம் செய்வதற்கு முன் சடங்குகள் செய்தவதற்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன், இயந்திரங்கள் பொருத்தப்பட்டு செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவுடையும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் கோரிக்கையான தகனமேடை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பழநி சண்முகநதியின் கரையில் ரூ.1.46 கோடியில் நவீன தகன மேடை: கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Palani River ,Palani ,Palani Shanmuknadi ,Dinakaran ,
× RELATED பழநியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு