×

போடிமெட்டு பகுதியில் காப்பி செடிகள் வெட்டி அழிப்பு: போலீசார் விசாரணை

 

போடி, ஜூலை 29: போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் சதுரகிரி பண்ணை பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (65). போடிமெட்டு அருகே மணப்பட்டி பகுதியில் இவருக்கு சொந்தமான காப்பி தோட்டம் உள்ளது. போடி அருகே விசுவாசபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் ராமச்சந்திரன் (35). இவர், மணப்பட்டியில் உள்ள ஜெயசீலனின் காப்பி தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஜெயசீலனிடம் இந்த தோட்டம் எனக்கு சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு நடவு செய்யப்பட்டிருந்த காப்பி செடிகளை சராமரியாக வெட்டி தள்ளினார். இதில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள காப்பி செடிகள் நாசமடைந்தன. இதனை ஜெயசீலன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், ஜெயசீலனை கீழே தள்ளிவிட்டதுடன், அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்து குரங்கணி காவல் நிலையத்தில் ஜெயசீலன் புகார் அளித்தார். இதன்பேரில் எஸ்.ஐ ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

The post போடிமெட்டு பகுதியில் காப்பி செடிகள் வெட்டி அழிப்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Podimetu ,Bodi ,Jayaseelan ,Chathuragiri Farm ,Bodi Periyandavar High Road.… ,Bodimettu ,Dinakaran ,
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...